பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு – அரசுப் பள்ளிகள் சாதனை

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி 89.79 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டை விட .05 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மேலும், 3 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,199 மாணவர்கள், 3,589 மாணவிகள் என மொத்தம் 5,788 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 1,782 மாணவர்கள், 3,357 மாணவிகள் என மொத்தம் 5139 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் 88.79 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட .05 சதவீதம் அதிகமாகியுள்ளது. இதை தொடர்ந்து, நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற 3 பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், துணை ஆணையாளர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

சென்னை மாநகராட்சிப்பள்ளியில் படித்த 69 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், கணக்கு பதிவியலில் 48, வணிகவியலில் 17, கணக்கில் 1, கம்ப்யூட்டர் சயின்ஸில் 1, பிசினஸ் மேத்ஸ் 1, பொருளியல் 1 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 74 மாணவ, மாணவிகள் 1100க்கு மேல் மதிப்பெண்: ஆயிரத்து நூறுக்கும் மேல் 74 மாணவ, மாணவிகளும், ஆயிரம் மதிப்பெண்ணுக்கு மேல் 326 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 2 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. இந்தாண்டு கோயம்பேடு சென்னை மேல்நிலைப்பள்ளி, சுப்புராயன் சென்னை மேல்நிலைப்பள்ளி, சிஐடி நகர் சென்னை மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இந்த பள்ளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தலா 1 லட்சம் பரிசு தொகை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Leave a Response