ஜனநாயகத்தை அழிக்கும் கர்நாடக ஆளுநர் – வலுக்கும் எதிர்ப்புகள்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆளுநரின் செயல் ஒருதலைப்பட்சமானது என ம.ஜ.த. தலைவர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் ஆளுநரரின் செயல்பாடு உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் அரசியல் அமைப்புகளை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

பாஜகவுக்கு பெரும்பான்மை எங்கே உள்ளது?
போதிய பெரும்பான்மை இல்லாதபோது சட்டப்பேரவையில் பாஜக எப்படி நிரூபிக்கும்? என அவர் வினவியுள்ளார்.

முடிந்தால் 15 நாட்களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து காட்டட்டும் என குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தந்துள்ளது சட்டவிரோதம் என அவர் கூறியுள்ளார்.

Leave a Response