
அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் போர் என்கிற காரணத்தைச் சொல்லி, இந்திய ஒன்றியத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிகாற்று உருளை விலை, நேற்று ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு, காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது….
பணவீக்கத்தின் தாக்கம் தேர்தல்களுக்குப் பின்னரே உணரப்படும் என்று நான் முன்பே கூறியிருந்தேன்.
அதன்படி இன்று, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே. இதுதான் தேர்தலுக்கான விலை.
பிப்ரவரி முதல் இதுவரை ரூ.1,380 அதிகரித்துள்ளது. வெறும் 3 மாதங்களில் 81% என்பது மிகப்பெரிய விலை உயர்வு. தேநீர் கடைகள், தாபாக்கள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் என அனைவரின் சமையலறையின் மீதும் சுமை அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம், உங்கள் உணவுத்தட்டின் மீதும் (உணவு விலையிலும்) எதிரொலிக்கும். முதலில் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ளனர். பிறகு பெட்ரோல்-டீசல் விலையையும் உயர்த்துவார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்


