ஐபிஎல் – மும்பையிடம் போராடித் தோற்ற பஞ்சாப்

ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக போலார்ட் 50, குணால் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல்-கெயில் ஓரளவு சிறப்பாக தொடக்கத்தை தந்தனர்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 183 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 79, ஆரோன் பிஞ்ச் 46 ரன்கள் எடுத்தனர். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி தகுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

Leave a Response