கர்நாடக சட்டமன்ற மதச்சார்பற்ற ஜனதா தள குழு தலைவராக குமாரசாமி தேர்வுசெய்யப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி. ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது. குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்கிறது. எங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என சிலர் செயல்பட்டதால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
அதிகாரத்திற்காக ஆசைப்படவில்லை, பிரதமர் பதவியை நாட்டு நலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம்.
குதிரை பேரம் நடைபெறுவதை ஜனாதிபதியும் கவர்னரும் அனுமதிக்க கூடாது.
‘ஆபரேஷன் கமல்’ வெற்றிகரமாக நடந்ததை மறந்துவிடக்கூடாது. எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் உங்களிடமிருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம். பாஜகவில் இருந்து வெளியேற சில எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளனர். பாஜக குதிரை பேரம் பேசினால் எங்கள் எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைப்போம்.
என கூறினார்.