பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மே 2 இரவு நடந்த ஐபிஎல் டி20 லீக் 32வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
மழை காரணமாக 18 ஓவர்கள் என் நிர்ணயம் செய்யப்பட்டது.
முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்தது. டெல்லி அணியில் ஷா 47 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன், ரிஷப் பாண்ட் 69 ரன் (7 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் கனமழை குறுக்கிட்டதால், டிஎல் விதிப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவரில் 151 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ராஜஸ்தான் அணியில் முதலில் ஷார்ட், பட்லர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டம் ஆடிய இந்த ஜோடி 6.3 ஓவரில் 82 ரன் சேர்த்தது. பட்லர் 67 ரன் எடுத்தபோது மிஸ்ரா பவுலிங்கில் பாண்ட் ஸ்டெம்பிங் செய்ய அவுட்டானார். ஷார்ட் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.
12 ஓவர் முடிவில் 146 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது.