நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு – புரட்சிக்கவி பிறந்தநாள் இன்று

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’.

பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் பாரதிதாசன்.

தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

தனது படைப்புகளுக்காக ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்றவர்.

ஏப்ரல் 29, 1891 இல் புதுச்சேரியில் பிறந்த அவர் ஏப்ரல் 21, 1964 அன்று மறைந்தார்.

தமிழ் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் அவர் எழுதிய கவிதை ஒன்று…

நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு – தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!
போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில்
போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு.

நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?
தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம்
தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு!

மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்
முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு
கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை
குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு!

நாவலரும் காவலரும் ஆண்டதுஇந்நாடு-நிமிர்ந்து
நாம்தமிழர் நாம்தமிழர் என்றுபாடு
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு?-தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!

முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ் நாடு-நீ
முன்னே்றுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா?
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு

தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு-நம்
தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு-தமிழர்
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!

Leave a Response