தியாகதீபம் திலீபன் 31 ஆவது நினைவுநாள் – சீமான் வீரவணக்கம்

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்.

தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 26-09-2018 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தியாகத்தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு முன் ஈகைச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.

Leave a Response