தெலுங்கு நடிகர்கள் நல்லவர்கள் தமிழ் நடிகர்கள் மோசம் – குமுறிய தயாரிப்பாளர்

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லுஅர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் படம், ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’.

அது தமிழில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு,மே 4 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

அப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது…,

தெலுங்கு இன்டஸ்ட்ரிகிட்ட இருந்து தமிழ்த்திரையுலகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்கள் சரி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், நடிகர்கள் சம்பளம் மாதிரியான பெரிய விஷயங்களை நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும்.

உதாரணத்துக்கு, தமிழில் ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்கிறதென்றால் அந்தப்பட நாயகன், 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்.

அதுவும் எப்படி? 10 கோடி ரூபாய் அட்வான்ஸாகக் கேட்கிறார்கள். ஆனால், தெலுங்கில் அதே நூறு கோடி வியாபாரம் உள்ள ஹீரோவுக்கு 15 கோடி ரூபாய் சம்பளமும் 50 லட்ச ரூபாய் அட்வான்ஸும் கொடுத்தால் போதும்.

தமிழில் அப்படி இல்லை. சுயநலமாக நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

நடிகர் கார்த்தி, வியாபாரத்தைக் கணக்கிட்டு நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் பண்ணணும் என்று பேசியிருக்கிறார். அதை நான் வழிமொழிகிறேன்.

நான் ஏற்கெனவே ஹைதராபாத்தில் ஆபிஸ் போட்டுவிட்டேன். அங்கே போய்ப் படம் எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

Leave a Response