
பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசி மாட்டிக்கொண்ட எஸ்.வி.சேகர், அதற்காக மன்னிப்பு கேட்டதிலும் தப்பு செய்து மாட்டியிருக்கிறார். இதனால் அவர் மீது பத்திரிகையாளர் சகாயராஜ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன் விவரம்….
கடந்த 20/4/2018 அன்று Address: 29, 5th Trust Cross Street, Mandaveli, சென்னை – 600028 என்ற முகவரியில் வசிக்கும் S ve sekar என்பவர் “பெண் நிருபர்களை தரக்குறைவாக விமர்சித்ததற்க்கு மன்னிப்பு கோரும் ” வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பை அவர் வெளியிட பயன்படுத்திய காகிதமானது மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே பயன்படுத்தும் காகிதமாகும்!
அந்தக் காகிதத்தின் மேல்புறம் தமிழக அரசின் இலட்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு உரிமையில்லாத மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அந்த காகிதத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர் “தெரிந்தே செய்த தரக்குறைவான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்பதற்க்கு ” தமிழக அரசின் இலட்சினை பொறித்த காகிதத்தைப் பயன்படுத்தியது அப்பட்டமான சட்ட மீறலாகும்! மேலும் தற்போது வேறொருவர் பயன்படுத்திவரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி இருப்பதும் மோசடி வகை குற்றமாகும்!
எனவே மேற்கண்ட S ve sekar என்பவர் மீது உரிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இனி வரும் காலங்களில் தமிழக அரசின் இலட்சினையை தகுதியில்லாத நபர்கள் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதால், அதுபோல் நிகழாமல் தடுக்க தமிழக காவல்துறை மேற்கண்ட நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். எனவே தமிழக அரசின் இலட்சினையை தவறாகப் பயன்படுத்திய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளது.


