காமன்வெல்த் குத்துச்சண்டை – தங்கம் வென்ற மேரிகோம்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டுத் திருவிழாவில் 10-வது நாளான இன்று, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் (குத்துச்சண்டை) இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் மேரிகோம் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர் கொண்டார். இன்று நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் மேரிகோம் 4-0 என வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 43 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

Leave a Response