சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று ‘வெல்லும் தமிழீழம்’ என்ற பெயரில் இந்த மாநாட்டை மே17 இயக்கம் நடத்தியது.

நான்கு கட்ட அமர்வுகளாக நடைபெற்ற இம்மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்களும், சட்டப் பேராசிரியர்களுமான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

மாநாட்டில் பேசிய பழ.நெடுமாறன்,

புலிகள் இருந்தவரை இந்துமாக் கடலை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. இந்துமாக்கடல் சீனாவின் கட்டுக்குள் சென்றுவிட்டது. இந்தியாவில் டெல்லியில் இருக்கும் புத்திசாலிகளே தெரிந்துகொள்ளுங்கள். இந்தியா மிகப்பெரும் ஆபத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்காளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கெனவே சீனாவின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. தற்போது இந்தியப் பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல… தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரைக்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்

என்றார்.

Leave a Response