அருவி-25.. தீரன்-5௦ ; நம்பிக்கை முகம் காட்டும் தயாரிப்பு நிறுவனம்..!


சமீபத்தில் வெளியான அருவி போன்ற சமூக நோக்கிலான கதை, அதிகரிப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையுடன் இன்று 25 நாட்களை தாண்டி, ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த நவம்பர் இறுதியில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பிரமாண்டமான படமும் இன்று 50வது நாளை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக அறிந்து, கதையை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டி, கதையிலும், செலவிலும் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நல்ல படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார்கள் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபுவும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும்.

தற்போது சினிமா இருக்கும் சூழலில் ஆரோக்கியமான படங்களை மட்டுமே தயாரிப்பது என்கிற தீர்க்கமான முடிவெடுத்துள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நம்பிக்கை தருகிறது..

Leave a Response