சற்குணம் படத்திற்கு இந்தியில் வசனம் எழுதும் மாதவன்..!


இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ஆகிய படங்களின் வெற்றியால் மாதவனின் ரீ என்ட்ரி அவருக்கு வெற்றிகரமாகவே அமைந்துவிட்டது. அந்தவகையில் அடுத்ததாக அவர் நடிக்கவுள்ள படத்தை ‘களவாணி’ இயக்குனர் சற்குணம் இயக்குகிறார். தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு இந்தியில் வசனங்களை மாதவனே எழுதுகிறார்.

இந்தப்படத்தில் சில பறவைகள், மிருகங்கள் ஆகியவையும் நடிக்க இருப்பதால், ஹாலிவுட்டில் ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள கிரேக் பரிட்ஜ் என்பவரை இந்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் சற்குணம். சில விலங்குகளை தாயலாந்தில் இருந்தே பயிற்சி கொடுத்து அழைத்து வர இருக்கிறார்களாம்.

சற்குணம், மாதவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, ஹாரிபாட்டர், கிரேக் பரிட்ஜ்

Leave a Response