ஆர்.கே.நகரை கைமாற்றிவிட்ட வெங்கட்பிரபு..!


வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆர்.கே.நகர்’. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்க பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Response