பிரபல இசையமைப்பாளர் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் நேற்று மதியம் ஹைதராபாத்தில் காலமானார்

நடிகர் கார்த்திக் நடித்த,மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான ” அமரன் ” படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63).

இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சைபெற்றுவந்தார், நேற்று மதியம் 11-மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது உடல் நாளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படும். நாளை மதியம் இறுதிச் சடங்கு நடைபெறும் .

“அமரனை” தொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இவரது இயற்பெயர் டைடஸ் ( Titus ),மனைவியின் பெயர் ஷோபியா ( Sofiya ),மற்றும் மகள்களான ஷரோன் ( Sharon ), பிராத்தனா( Prathana ) உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆதித்யனின் இறுதிச்சடங்கு நாளை (டிசம்பர் 7,2017) மதியம் சென்னை முகப்பேரில் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Funeral on Thursday afternoon in Chennai .
112, Kennington, Murugan Sulokchana Street, Golden George Nagar, Mogappair East, Chennai 107.

Leave a Response