ஆர்கேநகர் தேர்தல் குறித்து சீமான் விடுத்துள்ள புதிய செய்தி

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்திருந்த விஷால், ஜெ. தீபா ஆகியோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. அதே சமயம்,

நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பதிவுசெய்திருந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்களின் வேட்புமனு இன்று 05-12-2017 தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது.

மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்………

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெறும் தேர்தல் அல்ல; மானத் தமிழினத்திற்கு ஒரு புரட்சிகரப்போர்!

முன்பைவிட மிக வீரியமாக, மிக உறுதியாக இலட்சிய வெறியோடு ஆர்.கே நகர் தேர்தலை எதிர்கொள்வோம்!

நாம் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்தவர்கள்; மக்களை நம்பி நிற்போம்! மக்கள் நம்ப நிற்போம்!

நமக்கு காலம் கையளித்திருக்கும் வரலாற்றுக் கடமை இது! அந்தக் கடமையை நம் ஒவ்வொருவர் தோளின் மீதும் பகிர்ந்துகொண்டு பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்! ஒருநாள் காலமே நமக்கு வெற்றியைப் பரிசளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

நமது கட்சியில் தலைவர்கள் தொண்டர்கள் என்று யாரும் இல்லை; நாம் நம் மக்களிடம் அவர்களின் பிள்ளைகள் என்ற உரிமையில் வாக்கு கேட்டு செல்வோம்!

வெற்றி-தோல்வியைப் பற்றி சிந்திக்காது, அயராது களத்தில் நேர்மையாக இறுதிவரை உறுதியாக நின்று போராடுவோம்!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர் வெல்வோம்!

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Response