நேற்றைய முன்னிரவு என் வாழ்வின் நினைவிலிருந்து தவிர்க்கவே முடியாத இரவுகளில் ஒன்று.
மக்கள் கவிஞன் இன்குலாப்பின் ஓராண்டு நினைவுநாளைப் போற்றும் விதமாக அவரின் “ஓளவை” நாடகம் சென்னை எலியாட் கடற்கரையில் நடைபெற்றது.
அரங்கம் கொள்ளா ரசிகர்கள். இந்த அற்புதமான நாடகக்கலையை எதிர்வரும் பல தலைமுறைகளுக்கு நாம் கடத்தியாக வேண்டிய கட்டாயக் கடமையில் இருக்கிறோம் என்று உணர்த்திய தருணங்கள் அவை.
இன்குலாப் இந்த சமூகத்தின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் கொண்டிருந்த பரந்த அக்கறையை ஒவ்வொரு காட்சியிலும் காணமுடிந்தது.
தேர்ந்த நடப்பிலும் வசன உச்சரிப்பிலும் அரங்கம் மெய்சிலிர்த்தது.
கிழவியாகவே நமக்கு அறிவிக்கப்பட்ட ஔவையின் இளம்வயது நாட்களின் காட்சியமைப்புகள் அழகோவியம்.
“இறுதியில் இனம்தான் மிஞ்சும்” என்று, நாம் யாவரும் தவிர்க்கவே முடியாத பாடம் ஒன்றுடன் நாடகம் முடிந்தும்,
இன்குலாப்பின் அழிக்கவே முடியாத நினைவுகள் ஒவ்வொருவர்க்குள்ளும் இன்னும் ஆழமாக ஆட்சிசெய்யத் துவங்கிற்று.
ஆண்டன் பெனி
03.12.2017.