விரைவில் உணர்வாய் பகையே,உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே

இன்று பிறந்த நாள் காணும் தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவுக்கு 69 வது இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

எம்மண்ணில் முறியும் ஒவ்வொரு மரமும்

முளைவைத்து விட்டே முறிகிறது.

பிரியும் ஒவ்வொரு உயிரும்

அடுத்தகணமே இன்னோர் உடலாகி நடமாடுகிறது.

தளரோமென்று காற்றுச் சத்தமிடுகிறது.

உன்மீதான கோபத்தில் முகம் சிவந்து

இன்ங்கு வெள்ளைப் பூக்களும் சிவப்பு நிறமாயின.

கருப்பைக்குள் எம்பிள்ளைகள் அசையும் போதே

நெருப்புக்குள் நீந்தப் பயிற்சியெடுக்கின்றனர்.

எங்கள் அத்திவாரமே வித்தியாசமானது.

புலிகள் கறுப்பு

பிரபாகரன் நெருப்பு!

விரைவில் உணர்வாய் பகையே!

உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே!

– ஆனி 1996 –

Leave a Response