பைனான்சியர் மதுரை அன்பு இவருடைய பினாமியா?

சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன் அவர் எழுதிய வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாக்குமூலத்தில் பணத் தேவைக்காக மதுரையில் உள்ள பிரபல பைனான்ஸியர் அன்புச்செழியனிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பித்தரக்கோரி கடந்த ஆறுமாத காலமாக குடைச்சல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர் குடும்பப் பெண்களையும் பெரியவர்களையும் தூக்கிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மன உழைச்சலுக்கு ஆளாகிய அசோக்குமார் அவரது வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

அன்புச்செழியன் (எ) மதுரை அன்பு என்பவர் பிரபல பைனான்ஸியர். பண பலத்தோடு அரசியல் பிண்னணியும் உள்ளவர். படம் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் இவரிடம்தான் பணம் வாங்குவார்கள். தொடக்கத்தில் பணம் கொடுத்துகொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் படங்களை வாங்கி விநியோகிக்கும் விநியோகஸ்தர் ஆனார். அதன்பின் தயாரிப்பாளராகவும் ஆனார்.

ஒருவருக்குப் பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் வீடு தேடி பணம் வரும். ‘உங்களுக்குப் பணத் தேவை இருப்பது எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை எடுத்துக்கோங்க. முடியும்போது திருப்பிக் கொடுங்க’ என்று தானாகவே முன்வந்து அவரது வலைக்குள் சிக்கவைப்பது இவரது யுக்தி. ஒருவர் இவரிடம் பணம் வாங்கினால் சொன்ன தேதியில் திருப்பித்தர வேண்டும். அப்படித் தராவிட்டால், தொடர்ந்து நூற்றுக்கணக்கான போன் கால்கள் வரும். அதைத் தவிர்த்தால் மிரட்டல்கள், வீட்டில் உள்ள பெண்களை, பெரியவர்களை, குழந்தைகளை தூக்கிச்சென்று பணத்தைக் கொடுத்துட்டு கூட்டிக்கிட்டு போ என்ற நிபந்தனை வைப்பார். இவரின் மிரட்டல்களுக்கு ஆளானவர்கள் தமிழ்சினிமாவில் ஏராளம் என்று சொல்வார்கள்.

இவருடன் தற்போதைய துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ஒருவர் பங்குதாரராக இருக்கிறார் என்றும் இவர் ஓபிஎஸ்ஸின் பினாமி என்றும் பேச்சுகள் இருக்கின்றன.

வட்டிக்குப் பணம் கொடுத்து அதை சட்டத்துக்குப் புறம்பாக வசூலிப்பதால் பிரபலங்களின் தொடர்பு உண்டு என்று இவர்களே பொய்யான செய்திகளைப் பரப்புவதுண்டு. ஓபிஎஸ் பினாமி என்பதும் அப்படித்தானா? என்ற கேள்வியும் இருக்கிறது.

Leave a Response