இயக்குநர் பா.இரஞ்சித் துவக்கி வைத்த புதியபடம்

பச்சை என்கின்ற காத்து, மெர்லின் போன்ற படங்களை இயக்கியுள்ள கீரா, இப்போது எழுதி இயக்கவிருக்கும் படம் பற. கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்கின்றனர். முன்னணி நடிகர்களும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்துக்கு ஔிப்பதிவு சிபின் சிவன்,இசை ஜார்ஜ் வி.ஜாய்,பாடல்கள் உமாதேவி, சினேகன்,எடிட்டிங் சாபு ஜோசப்,கலை மகேஷ்

அண்மையில் நடந்த முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு ஆக்ஷன், கட் சொல்லி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

அவர் கலந்து கொண்டதால் முதல்நாளிலேயே இப்படத்துக்கு நல்ல கவனம் கிடைத்திருக்கிறது.

Leave a Response