கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக பாடலாசிரியர் சினேகன் அறிவிக்கப்ப்ட்டுள்ளார்.
இன்றுவரை அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை. ஏன் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய்வில்லை? என்று கேட்டால், வேட்புமனுவின்போது தாக்கல் செய்யும் ஆவணங்களைத் தயார் செய்வதில் தாமதம் ஆகிறது என்றும் நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, சினேகனை விலகிக் கொள்ளச் சொல்லி பேரம் நடப்பதாகத் திடுக்கிடும் தகவல் ஒன்றும் உலவிக்கொண்டிருக்கிறது.
அது என்ன?
விருகம்பாக்கம் தொகுதிக்குள் உள்ள ஸ்டார் குணசேகரன் என்பவர், சினேகனிடம் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் நான் போட்டியிடுகிறேன் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடுவது என்பதால், கமலிடம் கேட்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சினேகன்.
அதேநேரம், கமல் கட்சியில் நிர்வாகத்தில் இருக்கும் குமாரவேல், மெளரியா ஆகியோரிடம் இத்தகவல் சொல்லப்பட்டதாம். அவர்களும், சினேகனுக்கு ஒரு தொகை மட்டுமின்றி எங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால், கமலிடம் எப்படிப் பேசவேண்டுமோ அப்படிப் பேசி வேட்பாளர் மாற்றத்தைச் செய்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்களாம்.
இதுதொடர்பான பேரங்கள் நடந்துவருவதால்தான் சினேகன் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் பேரம் படிந்தால் ஏதாவதொரு காரணம் சொல்லி அவர் விலகிக் கொள்வார் பேரம் படியவில்லையென்றால் எதுவுமே நடக்காதது போல வேட்புமனு தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது.
அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவலில் மிகவும் அதிர்ச்சிக்குரிய விசயம் கமலின் நம்பிக்கைக்குரிய குமாரவேலும் மெளரியாவும் இப்படி திரைமறைவுப் பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான். இந்தத் தகவல் முழு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கமல் பாவம்.