பிக்பாஸ் வீட்டில் சினேகன் மூக்குடைத்த கமல்

பிக்பாஸ் வீட்டில் கடந்தவாரம் கவிஞர் சினேகன், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது சினேகன் பேசும்போது, கமல் சார், மிகப்பெரிய மனிதர். அவருக்கென மரியாதை இருக்கிறது. ஆனால் கமலிடம் பேசும்போது, இங்கே நிறையபேர் கால் மேல் கால் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில், இது தவறு என்று நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து.

எனவே, கமல் சாரிடம் மரியாதையாக நடந்துகொண்டால் நன்றாக இருக்கும்’ என்று சொன்னார்.

நேற்று சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வந்திருந்தார். அப்போது கமல் பேசும்போது, ‘சினேகன் சொன்னதைக் கவனித்தேன். அவர் கிராமத்திலிருந்து வந்தவர். கிராமங்களில் இப்படியெல்லாம் சொல்லுவார்கள்.

நான் என்னுடைய மூன்றரை வயதிலேயே பரமக்குடியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டேன். என்னையும் இப்படிச் சொல்லித்தான் வளர்த்தார்கள்.

ஆனால், என் 12 வயதில், பெரியாரின் புத்தகங்களும் அவரின் கருத்துகளும் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தின. அதேசமயம், இயல்பாகவே  கால் மேல் கால் போட்டுக்கொள்வதை நான் செய்வதே இல்லை. அது எனக்கு செளகர்யமாக உட்கார்ந்திருப்பது போல் தெரியவில்லை. 

நீங்கள் உங்கள் கால் மேல் உங்களின் காலைப் போட்டுக்கொள்கிறீர்கள். எது உங்களுக்கு செளகர்யமோ, எது உங்களுக்கு இயல்போ… அப்படியே நீங்கள் இருங்கள். எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

அதேசமயம், என் கால் மீது உங்கள் கால்களைப் போடாமல் இருந்தால், அதுவே போதும் என்றார்.

கமலுக்கு மரியாதை செய்ய நினைத்தார் சினேகன், ஆனால் பொதுவெளியில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் கமல்.

Leave a Response