
கேரளாவில் விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவதையொட்டியும் விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாகவும் ‘ஜர்னி ஆப் லெஜென்ட்’ என்கிற வீடியோ ஆல்பம் ஒன்றை கேரள விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த பாடலை அனீஸ் பஷீர் என்பவர் இயக்கியுள்ளார்.. இதற்கு நகாஷ் நௌசாத் என்பவர் இசையமைத்துள்ளார்..
இந்தப்பாடல் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இந்தப்பாடல் கேரள விஜய் ரசிகர்கள் விஜய்யை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை சித்தரிக்கும் விதமாக எழுதப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக ‘வாய்யா தளபதியே.. கேரளாவின் அதிபதியே” என கேரள ரசிகர்கள் விஜய்யை புகழ்ந்து பாடுவதை பார்க்கும்போது ‘தமிழண்டா’ என நாம் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.


