ஒரே இந்தியாவில் தமிழ் மட்டும் இல்லை – பாஜகவின் செயலால் தமிழகமக்கள் அதிர்ச்சி

பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம் செயல்பட்டுவருகிறது.

இந்த இணையதளத்தில் இந்தியாவின் கலாசாரக் கூறுகள் குறித்தும் மொழிகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன் நோக்கம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இணையத்தின் முகப்புப் பக்கத்தில் ஐந்து படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் படங்களில், இந்திய கலாசாரங்கள், விளையாட்டுகள் என விளக்கப் படங்கள் உள்ளன.

அதில், “ஏக் பாரத் ஷ்ரெஸ்தா பாரத்” (ek bhart shreshtha bharat) என்று ஆங்கிலம் உள்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழிக்கு மட்டும் இடம் அளிக்கப்படவில்லை. தமிழ் மொழியில் அந்த வாசகம் குறிப்பிடப்படவில்லை.

மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழிக்குப் பல்வேறு சோதனைகள். தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் வேண்டும், தமிழ்நாட்டின் கனிமவளங்கள் வேண்டும் ஆனால் தமிழ் மொழி வேண்டாம் உலகிலேயே உயரிய தமிழ்ப்பண்பாடு வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்லிவருகிறது மத்திய அரசு. இதனால் தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? என்கிற கேள்வி தமிழகமக்கள் மத்தியில் எழுகிறது. அது சமூக வலைதளங்களில் எதிரொலிக்கிறது.

Leave a Response