விஜய் ரசிகர்கள் செய்வது சரியா? – தமிழ்மக்கள் வேதனை


யாழில் சில தறுதலைகளின் செயல்!

அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது யாருவரும் அறிந்தது. ஹார்த்தால் எமது வாழ்வியலை முடக்கும் என்று தெரிந்த போதும் கல்விச்சாலைகள் வியாபார தாபனங்கள் என்று எமது இனத்தினை மேம்படுத்துகின்ற அத்தனை சேவைகளும் இக் ஹர்த்தாளின் தார்ப்பரியம் அறிந்து பூரணமாக முடக்கப்பட்டது. இளைஞர்கள் யுவதிகள் ஆளுநர் அலுவலகத்தின் முன்னர் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எங்கும் இயல்பு நிலமை அற்று காணப்பட்டது.

ஆனால் கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு திரையரங்கு முன்னால் குறிப்பிட்டு சொல்லத்தக்க இளைஞர் கூட்டம் கூடியது. திட்டங்களைத் தீட்டுகின்றார். அவர்கள் எப்பவோ வர இருக்கின்ற ஒரு திரைப்படத்திற்காக அதன் விஜேய்க்கு பாரிய கட்டவுட் வைக்கும் வேலையில் மிகவும் மும்மரமாக ஈடுபடுகின்றனர்.

ஒரு இனம் தனது இனவிடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அல்லது உதவி புரிந்த அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி உணர்வு பூர்வமாக அகிம்சை வழியிலான போராட்டத்தை நடாத்திக் கொண்டு இருக்க அதே இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் எமது வாழ்வாதாரத்தில் தங்கள் ஆடம்பர வாழ்க்கையை கொண்டு நடாத்துகின்ற எமது இனத்திற்கென்று ஒரு துளி வியர்வையைக் கூட சிந்தா சினிமா நடிகர்களுக்கு தங்கள் வியர்வைச் சிந்தி கட்டவுட் வைக்கின்றார்கள். இதன் தாற்பரியம் என்னவென்று விளங்கவேயில்லை.

நாம் முன்னர் எதை நோக்கிச் சென்றாம் தற்போது எதை நோக்கிச் செல்லுகின்றோம் என்பதை நினைக்கும் மனம் வேதனை அடைகின்றது. எமது இனத்தின் அடையாளமும் அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் இளைஞர்கள் கையில்தான் இருக்கின்றது என்பதை நாம் மறக்க தொடங்கி விட்டோமோ என்ற எண்ணமும் எழத்தான் செய்கின்றது

Leave a Response