எடுத்துக்கொள்ளுங்கள் அவர்கள் கோமணங்களை…- பழனிபாரதியின் அனல் வரிகள்

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

போன்ற ஏராளமான இதயத்தை வருடும் இனியஇசைப்பாடல்களுக்குச் சொந்தக்காரரான பழனிபாரதி, நாட்டில் நடக்கும் முக்கியநிகழ்வுகளில் உழைக்கும்மக்களின் பக்கம் நின்று கடுமையான எதிர்வினைகள் ஆற்றிவருகின்றார். அண்மையில் பாரதியசனதாஅரசு கொண்டுவந்திருக்கும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் தன்மைகளைப் பொறுக்கமுடியாமல் அவர் ஆற்றியிருக்கும் கடுமையான எதிர்வினை.

அய்யா…அய்யா..
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் நிலங்களை…
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் குடிசைகளை…
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் கலப்பைகளை …
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் கோமணங்களை…

அய்யா…அய்யா..
ஒரு பிடி அரிசி மட்டும் பிச்சை இடுங்கள்…
அவர்களுக்காக அல்ல…

ஊருக்கெல்லாம் உணவளித்தவன்
வாய்க்கரிசி இல்லாமல் செத்துப்போனால்
அந்தச் சாபம்
நம்மைச் சும்மா விடாதில்லையா
அதற்காக!

– பழநிபாரதி

Leave a Response