தமிழைக் கவுரவிக்க மலேசியப்பள்ளிகளில் திருக்குறள் பாடமாகிறது.

தமிழகத்திலிருந்து வேலை செய்வதற்காக மலேசியாவுக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களுக்கெல்லாம் ஓர் நற்செய்தியைச் சொல்லியிருக்கிறார் மலேசிய கல்விதுணைஅமைச்சர் கமலநாதன்.
சென்னைவிமானநிலையத்தில் ஊடகங்களிடம் பேசும்போது, தமிழ்மொழி செம்மையான பழமையான மொழி. அதை கௌரவிக்கும் வகையில், எங்கள் நாட்டில உள்ள 524 அரசுப்பள்ளிகளிலும் திருக்குறளைப் பாடமாக்கியுள்ளோம். வரும் கல்வியாண்டிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகிய எல்லாப்பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் திருக்குறள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மலேசியாவில் தங்கிப்படிக்கும் தமிழகமாணவர்களுக்கு தாய்நாட்டில் தங்கிப்படிப்பது போன்ற எண்ணம் ஏற்பட இது வகைசெய்யும். மலேசியாவில் தமிழர்கள் ஏராளமானவர்கள் இருப்பதால் இந்தியகலாச்சாரஉணர்வு ஏற்படுகிறது என்று சொல்லியிருக்கிறார்.
மலேசியா இந்தியா பல்கலைக்கழகங்கள் இடையே கல்வி, வேலைவாய்ப்பு போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Response