நாம்தமிழர்கட்சி கூட்டத்தில் ஆசிரியை சபரிமாலா, நடிகை கஸ்தூரி பங்கேற்பு

நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா? என்கிற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நாம்தமிழர்கட்சியின் மருத்துவப்பாசறை நடத்தவுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று (18-09-2017) நடக்கவுள்ள அக்கருத்தரங்கு குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்தும் “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு, செப்டம்பர் 18 அன்று மாலை 03 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

இதில் மருத்துவத்துறை சார்ந்த பேரறிஞர்களும், அறிவுசார் பெருமக்களும் பங்கேற்று தமது கருத்துரைகளை வழங்கவிருக்கிறார்கள்.

கருத்துரையாளர்கள்:
மருத்துவர் இரவீந்தரநாத்,
தொழில்நுட்ப அறிவுரைஞர் பொன்ராஜ்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
மருத்துவர் தாயப்பன்
மருத்துவர் இளவஞ்சி
மருத்துவர் ம.மதிவாணன்
சமூகச் செயற்பாட்டாளர், நடிகை கஸ்தூரி
சமூகப் போராளி சபரிமாலா
இவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாள்: 18-09-2017 திங்கட்கிழமை, மாலை 3 மணி
இடம்: அண்ணா கலையரங்கம், சுவாமி சிவானந்தா சாலை, தூர்தர்சன் (சென்னை) தொலைக்காட்சி எதிரில், சேப்பாக்கம், சென்னை

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response