இரட்டைமலை சீனிவாசனாருக்குப் பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கம் செலுத்துவோம் – சீமான்

18-09-2017 தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் – அதையொட்டி அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள குறிப்பு….

வரலாற்றில் முத்திரைப் பதித்த பெருமக்கள் சிலர், அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர். தாழ்த்தப்பட்டவர்கள் எனவும் தீண்டப்படாதோர் எனவும் ஒதுக்கப்பட்டு ஒடுங்கிக்கிடந்த மக்களுக்குத் தன் மதிப்பு உணர்வூட்டியவர்.
தான் கற்றதோடு அந்தக் கல்வியைத் தன் மக்களுக்கும் கிடைக்கவேண்டுமென்று அரும்பாடாற்றியவர் அதற்காகக் கல்விப் பணிகளைத் தாமே முன்னெடுத்தவர்.
ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கர், பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் வரிசையில் வரலாற்றில் தனக்கென்று தனி இடம் பதித்தவர்.
எல்லோராலும் அன்போடும் உரிமையோடும் ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்டவர் நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார். அந்த மகத்தான பெருந்தகையின் நினைவுநாள் இன்று (18-09-2017).
நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனாருக்குப் பெருமிதத்தோடும் திமிரோடும் நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

இவ்வாறு சீமான் எழுதியுள்ளார்.

Leave a Response