
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ், இந்த நிகழ்ச்சியானது ஓவியா இருந்தவரை வெற்றிகரமான நிகழ்ச்சியாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
ஓவியா வெளியேறியதையடுத்து சுவாரஸ்யம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், இந்த வாரம் மீண்டும் ஓவியா வர இருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இதனால், ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ-எண்ட்ரி ஆவதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில், அப்படி நடக்கவில்லை.
பல படங்களில் ஒரு குத்துப்பாடலுக்கும் சில படங்களில் கவர்ச்சிகரமான வேடங்களிலும் நடித்திருக்கும் நடிகை சுஜா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.
இவருடைய வருகை நிகழ்ச்சிக்குப் புத்துயிர் கொடுக்குமா? என்பதைப் போகப்போகத்தான் பார்க்கவேண்டும்.


