உ.பி.யைப் பற்றிப் பேசினால் ஏன் ஆண்டவருக்கு இவ்வளவு ஆத்திரம்? – கமலை வெளுக்கும் ராஜநாயகம்

தமிழக அரசு மீது கடும்கோபம் காட்டிவரும் கமல், இந்திய ஒன்றிய அரசின் மீதும் மற்ற மாநிலங்களில் நடக்கும் கொடுமைகளையும் கண்டும் காணாமல் இருக்கிறார். அவரும் பாஜகவின் மறைமுக ஆதரவில் செயல்படுகிறார் என்கிற யூகங்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக அவருடைய கருத்துகள் இருக்கின்றன. அதை பேராசியர் ராஜநாயகத்தின் எழுத்து உறுதிப்படுத்துகிறது.

ராஜநாயகம் எழுதியுள்ள குறிப்புகளில்,

பாராட்டுக்கள் கமல்ஜி.

சிக்ஸர் சிக்ஸர்களாக (ட்வீட்) அரசியலில் அள்ளிக் குவிக்கிறீர்கள். சுதந்திர தினமும் அதுவுமா நேற்று மட்டும் என்ன பரபரப்பான ஆட்டம் கமல்ஜி!
ஆனால்
நீங்கள் நிற்பதுதான்
ஆடுகளத்திற்கு வெளியில்!!!

இவ்வளவு காண்டு ஏன் கமல்ஜி?
உத்தரபிரதேசம் vs. தமிழ்நாடு

13 ஆகஸ்ட், பிற்பகல் 1.03. கமல்ஜி ட்வீட்:
“உ.பி. குழந்தைகள் மரணம். உ.பி. முதல்வருக்கு சத்யார்த்தி வைத்த வேண்டுகோளே சரியான வழி. இனி ஒருபோதும் இது நடவாமல் பார்த்துக்கொள்க…”
கவனியுங்கள்: ஆண்டவருக்கு இது ‘மரணம்’. கூடவே முதல்வருக்கு வேண்டுகோள்; ஒரு பொதுவான மன்னிப்பு.
ஆனால்
ஈர நெஞ்சுடைய அனைவரும் இதைப் ‘படுகொலை’ என்று கண்டித்ததும்,
படுகொலை நடந்தது முதல்வருடைய கோட்டையில் என்பதும்,
படுகொலைக்குப் பின்னால் மஹா ஊழல் ஒளிந்திருப்பதும்,
தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் / அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததும்
கமல்ஜிக்கு நிச்சயம் தெரியும்.
தெரிந்ததும் கோவம் பொத்துக்கொண்டு
வருகிறது!
15 ஆகஸ்ட், பிற்பகல் 2.58. கமல்ஜி ட்வீட்:
“ஓர் அரசில் நடக்கும் அசம்பாவிதம் மற்றும் ஊழலுக்காக அம் மாநில முதல்வர் பதவி விலகவேண்டுமென்றால், தமிழத்தில் ஏன் எந்தக் கட்சியும் ராஜினாமா செய்யுமாறு கோரவில்லை?…”
சூப்பர் லாஜிக்.
உ.பி.யைப் பற்றிப் பேசினால் ஏன் ஆண்டவருக்கு இவ்வளவு ஆத்திரம்?
அந்தக் கோபம் இவ்வளவு காட்டமாக அதிமுக மீது திரும்ப என்ன காரணம்?
ஏன் இச் சீற்றத்தின் ஒரு சிறு சில்லுகூட உ.பி. மீது காட்டப்படவில்லை?
அதே நாள். பிற்பகல் 3.13. கமல்ஜி ட்வீட்:
“என்னுடைய நோக்கம் இன்னும் சிறந்த தமிழ் நாடு…”
போற்றுதலுக்குரிய நோக்கம்தான். ஆனால் ‘குறுகிய மனப்பான்மை’ கொண்ட தமிழ்ப் பற்றாளரல்ல ஆண்டவர். அவர் ஒரு தேசியவாதி.
அவருடைய உன்னத நோக்கம் உ.பி. வரை விரிவடையாமல் போனது யோகியின் துரதிஷ்டம் எனலாமோ….

நட்சத்திர மண்டலங்களில் மிதந்து ட்வீட்டும் ஆண்டவரே,
நிதானமாய்த் தரை இறங்கி எதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள்.
வானங்களில் அல்ல வாழ்க்கை.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response