சக்தி வெளியேறியதை காயத்ரி எப்படி எடுத்துக்கொண்டார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் காயத்ரியின் பெரும்பலமாக இருந்தவர் சக்தி. அவருக்கு ஆதரவாகவும் நண்பனாகவும் இருந்தவர் சக்தி.
எனவே சக்தியின் வெளியேற்றத்திற்கு முன்பே பதட்டமும் உளைச்சலுமாக இருந்தார். தான் தனிமைப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினார். இந்த உலகத்தில் எந்தவொரு மனிதருமே முழுக்க முழுக்க நல்லவரும், தீயவரும் இல்லை. சதவீதத்தின் அளவு மட்டுமே மாறுபடும். இதுவேதான் காயத்ரிக்கும் பொருந்தும். தம்மிடம் உள்ளது பலவீனம் என்பதை உணர்ந்து பிறகு திருத்திக் கொள்ள முனையாதவர் பாடு சிரமம்தான். அந்தவகையில்தான் காயத்ரி மீது வருத்தமாக இருக்கிறது.

காயத்ரி காப்பாற்றப்பட்ட நிலையில் பார்வையாளர்களின் பலத்த எதிர்பார்ப்பின் படி ‘சக்தி’யின் வெளியேற்றம் நிகழ்ந்தது. இதன் மூலம் காயத்ரி தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்.

தன்னைக் குறித்து எவராவது சிறிது சீண்டினால் கூட உடனே கோபப்பபட்டு பிறகு வருத்தத்துடன் அழும் காயத்ரி அதே மாதிரியான தண்டனையை இன்னொருவருக்கு தராமலிருக்கவேண்டுமல்லவா?

‘சக்தி’ வெளியேறினால் காயத்ரி தனக்கு ஏற்படும் அத்தனை அழுத்தத்தையும் எங்கள் மீது போடுவார்’ என்கிற ரைசாவின் கருத்தை காயத்ரியால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இனி என் மாற்றத்தின் மூலம், அன்பான நடவடிக்கைகளின் மூலம் ரைசா நினைப்பை பொய்யாக்குகிறேன் என்று மனப்பூர்வமாக உணர்ந்து, ஆக்கப்பூர்வமான சவால் விட்டு அதைப் பின்பற்றலாம்.ஆனால், உடனே ரைசாவின் மீது கோபப்படுகிறார்.

‘நீ வெளிய போனா என்னைப் பத்தி எல்லார் கிட்டயும் நல்லதா சொல்லு’ என்பது போல் ‘என் அம்மாவை சென்று பார்’ என்றார்.

சக்தி வெளியேறிய மறுகணமே, ரைசாவின் மீதான கோபத்தை உடனேயே வெளிப்படுத்தினார் காயத்ரி. சக்தியின் பிரிவு மீதான துயரத்தை வெளிப்படுத்திய அடுத்த கணமே, இந்தக் கோபத்தை அவர் காட்டியதை என்னவென்று சொல்வது?

தனது ஆதங்கத்தை காயத்ரி தெரிவித்த போது பிந்துவால் சிலையாக மட்டுமே நிற்க முடிந்தது. ‘அவள் மேலிருந்த மரியாதை போய் விட்டது’ என்று அவர் மீதும் கோபப்பட்டார் காயத்ரி.
.

Leave a Response