பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.இதற்கு முக்கிய காரணமாக தொடக்கத்தில் ஜூலி, அதன்பின் ஓவியா ஆகியோர் இருந்தனர். இவர்கள் இருவருமே இப்போது வெளியேறி விட்டனர்.

ஓவியா தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.ஓவியாவுக்காக ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு அவரது புகழ் உயர்ந்து விட்டது.அவர் வெளியேறிய பிறகும் அவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜூலி, எதிர்மறையாக மக்களின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்து இருந்தார்.ஓவியாவை ரசித்து ரசித்துப் பார்த்தாலும், ஜூலியும் என்ன செய்யப்போகிறார் என்று பார்த்து வந்தனர்.

தற்போது இருவருமே இல்லாததால் நிகழ்ச்சி டல்லடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்டதாம். இது அப்பட்டமாகத் தெரிகிறது.எனவே இதனைச் சரிகட்ட என்ன செய்வது, யாரை அழைத்து வருவது என மூளையைக் கசக்கி வருகிறது.

நடிகர் ஜெயம்ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் மறுத்து விட்டதாகவும் தகவல் உலவுகிறது.

அதே போல கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாபவானிசங்கர் வரப்போவதாகச் சொன்னார்கள். அவரே அதை மறுத்துவிட்டார்.

கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் என்று நினைத்த விஜய் தொலைக்காட்சி டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினியை அழைத்திருப்பதாகவும் அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response