ஜூலி மற்றும் ரைசாவை கதறவிட்ட ஓவியா

பிந்துமாதவி வந்த பிறகு பிக்பாஸ் எப்படி இருக்குமோ என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பிந்து வந்தவுடன் ஜூலியிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

அதாவது, ஜூலி இதய வடிவத்தில் இருந்த பலூனை ஊதி பிந்துவிடம் I Love U என கொடுத்தார். அப்பொழுது பிந்து அதனை உடைத்துவிட்டார்.

இது ஒருபுறமிருக்க, இன்று ஜூலி பாடிக்கொண்டிருந்தபோது பாடலில் ‘பிகர்’ என்ற ஒரு வார்த்தை இருந்தது. அதைக் கேட்ட ஓவியா “நீ பிகரா ஜூலி” என கேட்க, “நான் பிகர் இல்லை தமிழ்ப் பொண்ணு” என்று ஜூலி சொன்னார்.

“உன்னை பார்த்தா தமிழ்நாட்டுல இருந்து வந்த மாதிரி இல்லையே.. எதோ வேறு கிரகத்தில் இருந்து வந்த (ஏலியன்) போல இருக்கு” என கூறி அசிங்கப்படுத்திவிட்டார் ஓவியா.

இதனால், மீண்டும் ஜூலிக்கும் ஓவியாவிற்குமிடையே பெரிய சண்டை ஏற்படுமோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒவ்வொருவரும் மற்றவர்களைப் போல நடித்து காட்ட வேண்டும் என்று கமல் கூறினார். ஓவியா முறை வந்த போது அவர் ரைசாவைப் போல நடித்துக் காட்டினார்.

நான் வெளியே போக வேண்டும். எனக்கு செல்போன் தாங்க. எனக்காக என் பாய் பிரண்ட் வெயிட் பன்றார் எனக் கூறியதோடு ரைசாவின் பாய் பிரண்ட் பெயரையும் கூறி விட்டார். ஆனால் அந்தப் பெயர் வந்தபோது மட்டும் சத்தம் வரவில்லை.

ஆனாலும் நிகழ்ச்சியின் கூடியிருந்த ரசிகர்களுக்கு மட்டும் கேட்டு விட்டது. இந்த நிகழ்வினால் ரைசா கதறிக் கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response