“செஞ்சுரலாம்” ; தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் ரோபோ..!


இயக்குனர் பாலாஜி மோகன், தனுஷை வைத்து ‘மாரி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்திலும் படம் முழுக்க தனுசுடன் வருவது போன்ற வேடத்தில் ரோபோ சங்கரை நடிக்க வைத்தார். இந்த நிலையில், தற்போது மாரி-2 படத்தை இயக்க தயாராகி விட்ட பாலாஜிமோகன், அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டார்.

அதோடு, படத்திற்கான நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து வரும் அவர், முதல் நபராக ரோபோ சங்கரை தேர்ந்தெடுத்தார். மாரி படத்தை போலவே இந்த படத்திலும் தனுஷின் நண்பராக நடிக்கிறார் ரோபோ சங்கர். ‘மாரி’ படத்தில் தனுஷ், “செஞ்சுருவேன்” என அடிக்கடி கூறுவார் இல்லையா..? அதை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘செஞ்சுரலாம்’ என குறிப்பிட்டுள்ளார் ரோபோ சங்கர்

Leave a Response