தமிழினப் போராளி பேரறிவாளனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்


•46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள்!

இன்று 30.07.17, 46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த 46 வருடத்தில் 26 வருடங்களை சிறையில் கழித்துள்ள பேரறிவாளன் தன் இளமைக் காலம் முழுவதையும் இழந்துவிட்டார்.

இனியும் எப்போது விடுதலை கிடைக்கும் என்பது தெரியாமலும் பரோல் லீவுகூட வழங்கப்படாமலும் சிறையில் வாடுகிறார்.

இவர் செய்த ஒரேயொரு தவறு தமிழ் இன உணர்வு கொண்டதாகும். அதனால் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருந்ததாகும்.

அதனால்தான் இவர் கழுத்தில் தூக்கு கயிறு தொங்கியபோது செங்கொடி தன் உயிரைக் கொடுத்து தடுத்தாள்.

தமிழகமே திரண்டு எழுந்து இவர் உயிரைக் காப்பாற்றியது. இன்றும்கூட இவர் விடுதலையை தமிழகம் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.

இத்தனை வருட சிறைக் கொடுமையிலும் பின்பும்கூட அவர் தான் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்ததை தவறு என்று கூறவில்லை.

முக்கியமாக அவர் தாயாரும்கூட தன் மகன் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தது தவறு என்று என்றுமே கூறியதில்லை.

அவர் நம்பிய தலைவர்கள்கூட மௌனமாக இருந்தபோதும் அவர் ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையை மாற்றவில்லை.

ஆனால் கேவலம் என்னவெனில் இதுவரை ஒரு ஈழத் தமிழ் தலைவர்கள்கூட பேரறிவாளனை விடுதலை செய்யும்படி கோரவில்லை.

ஆனால் பேரறிவாளனோ அல்லது அவரது குடும்பத்தவர்களோ இதை ஒரு குறையாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.

அந்த சிறிய இளைஞனிடம் எந்தளவு பெரிய மனசு. உண்மையிலே எனக்கு வெட்கமாக இருக்கிறது.

எங்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக ஒரு குடும்பமே எந்தளவு துன்பம் அனுபவிக்கிறது. ஆனால் அதை மறந்து நாங்கள் திரிகிறோம்.

அடுத்த பிறந்தநாளாவது தன் தாய் தந்தையருடன் பேரறிவாளன் கொண்டாட வேண்டும். அதற்காக குரல் கொடுப்போம்.

Leave a Response