மருதமலை முருகன் கோவிலில் இருந்த கல்வெட்டுகள் எங்கே?


இன்று மருதமலைக்குப் போயிருந்தோம். முன்னிரவுப் போதில் மலையில் வீசும் குளிர் காற்றில் நின்றபடி கீழே கோவை நகரம் ஜொலிப்பதைப் பார்ப்பது இனிமையான அனுபவம்.

எம்பெருமான் முருகன் எங்களை முழுமையாக ஆட்கொண்டாலும் சில விஷ்யங்கள் உறுத்தின.

1. கல்வெட்டுகளைக் கொண்ட பழைய கோவில் சுவர்கள் முழுமையாக இடிக்கப்பட்டு புதிய கோவில் கட்டப்பட்டூள்ளது. கல்வெட்டுகளைக் கொண்ட கற்கள் எங்கே என்று எந்தக் குறிப்பும் இல்லை. கல்வெட்டுகள் முழுமையாகப் படிக்கபப்ட்டுவிட்டன என்றாலும் அவற்றைப் பாதுகாத்து வைப்பது கடமை அல்லவா?

2. கோவிலைச் சுற்றியிருந்த பழமையான சத்திரங்கள் இடித்துத் தகர்க்கப்பட்டுவிட்டன. அவற்றை வடிவம் கெடாமல் புதுப்பித்திருக்க வேண்டும்.

3. பாம்பாட்டி சித்தர் குகையை மறைத்து சுவர் எழுப்பியிருக்கிறார்கள். இது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

4. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷ்யம் இது பழங்குடி மக்களான இருளர் பதிகளுக்கு நடுவே இருந்த கோவில். அவர்களால் வணங்கப்பட்ட தெய்வம். இப்போது கோவிலுக்கு அருகே ஒரே ஒரு இருளர் குடியிருப்பு இருக்கிறது. ஆனால் கோவில் நிர்வாகத்தில் அவர்களூக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

5. மலைகளுக்கு மேலே அடர் காட்டுக்குள் ஆதிமனிதர்களின் பாறை ஓவியங்கள் உள்ளதாக தொல்பொருள் ஆய்வுத் துறை பதிவுகள் காட்டுகின்றன. அவற்றைப் பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.

6. பாறை ஓவியங்கள், பழங்குடிகளின் இருப்பிடங்கள் இவற்றின் நடுவே உள்ள கோவில் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஒரு பொக்கிஷம். மேற்கொண்டு ஆய்வுகளுக்கு இடமில்லாமல் அதை நவீனப்படுத்திவிட்டார்கள்.

இனி செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

-இரா.முருகவேல் எழுத்தாளர்

Leave a Response