
சகாப்தம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், அடுத்து கதாநாயகனாக நடித்துவரும் படம் ’மதுரவீரன்’. ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம் இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில், சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் மதுரையில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடையும்.


