கமலின் அரசியல் அறிவு இவ்வளவுதானா?


தந்தி டி.வி.யில் இடம் பெறும் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசனை தலைமை செய்தி ஆசிரியர் ரெங்கராஜ்பாண்டே பேட்டி கண்டார் அப்போது அவர் கூறியதாவது:-

எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறி வைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.

நான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.

நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதார துறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும்.

நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இது போல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும்.

படிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக இருந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.

இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அது போன்ற நிலை உருவாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கமலின் பேட்டியில் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தலைவர் பற்றி அறியாதவராக கமல் இருக்கிறார் என்றும் இவருடைய அறிவு இவ்வளவுதானா என்றும் பல்வேறு விமர்சனங்கள். வரத்தொடங்கியிருக்கின்றன.

Leave a Response