
நல்ல படங்களாக தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்பதால் படங்களை தருவதில் அவ்வப்போது இடைவெளி விட்டுவிடுகிறார் ஷாம். அந்த இடைவெளியை உடைக்கும் விதமாக தற்போது சாரதி இயக்கத்தில் ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘காவியன்’.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.


