
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் புலிமுருகன். இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகி இங்கும் வரவேற்பை பெற்றது. புலிமுருகன் படத்தை அதன் சுவை குறையாமல் தமிழில் டப்பிங் செய்தவர் தான் வசனகர்த்தா ஆர்.பி.பாலா.
தற்போது புலிமுருகன் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து ஆர்.பி.ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி அகோரி என்ற படத்தை தயாரிக்கிறார். டி.எஸ்.ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படத்துவக்க விழா ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சித்து. இவருடன் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள். அகோரி படத்தின் தயாரிப்பாளரானாலும் கூட ஆர்.பி.பாலா தான் இந்த படத்திற்கும் வசனம் எழுதுகிறார்.


