
திமுக சட்டத்துறை துணைச்செயலாளர் வழக்கறிஞர் என்.மருதுகணேஷ் நேற்று சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது….
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளரும்,மூத்த வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பின்போது,ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதுள்ள வழக்கு குறித்து கேட்டதற்கு,திமுக ஆட்சியின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மிகத் தெளிவாக செய்தியாளர்களிடம் கூறினார்.இது அனைத்து ஊடகங்களிலும்,செய்தித்தாள்களிலும் வெளிவந்துள்ளது.
இந்நிலையில்,நேற்று இரவு இன்ஸ்டா சமூகவலைதளத்தில் பிரவீன் தவெக,விவேக் அழகர்சாமி அன்ட் சாய் ஜெகதீஸ் என்ற பெயர்களில் உள்ள மூன்று பேர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியை திரித்து பொய்யான, அவதூறான தகவலை அவர் கூறியதாகக் கூறி வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளனர்.சமூகவலைதளப் பதிவுகளில் பதிவு செய்த அந்த நபர்கள் ஆர்.எஸ்.பாரதி தெரிவிக்காத கருத்துகளை தெரிவித்ததாகவும்,மற்றும் கடந்தகால திமுக ஆட்சி குறித்து அவதூறாகவும்,திமுக தலைவர்கள் மீதும்,திமுக தொண்டர்கள் மீதும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி,மிகவும் அசிங்கமான, இழிவான வார்த்தைகளால் திட்டி அந்தப் பதிவை வெளியிட்டுள்ளனர்,
இவ்வாறு பொய்யான தகவலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,இனியும் நீங்க வேடிக்கை மட்டும் பார்ப்பீர்களா? என கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள்.இவர்களது இந்த உண்மைக்குப் புறம்பான,பொய்யான சமூகவலைதளபதிவுகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்துள்ளனர்.பார்த்தவர்கள் மனதில்,மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கான நிலையில் உள்ள திமுகவின் மூத்ததலைவர் ஆர்.எஸ்.பாரதி மீதும்,திமுக மீதும்,திமுக தலைவர்கள் தொண்டர்கள் மீதும்,ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது இந்த பொய் வீடியோ பதிவு அமைந்துள்ளது.இதனால் திமுக மூத்ததலைவர் ஆர்.எஸ்.பாரதியின் புகழுக்கும்,திமுகவின் புகழுக்கும் களங்கம் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.மேலும் தமிழ்நாட்டில் இருதரப்பினர் இடையே மோதல் உண்டாகி சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயமும் உள்ளது.
எனவே ஆர்.எஸ்.பாரதி மீதும்,திமுகவின் மீதும் பொய்யான,உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட்ட இன்ஸ்டா சமூகவலைதளத்தில் பிரவீன் தவெக,விவேக் அழகர்சாமி அன்ட் சாய் ஜெகதீஸ் என்ற பெயர்களில் உள்ள மூன்று பேர் மீதும்,இந்த பொய்யான கருத்துகளைப் பதிவு செய்வதற்கு பின்னணியில் இருந்து தூண்டிய அமைச்சர்கள் யார் என்றும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இன்ஸ்டா சமூகவலைதளத்தில் பிரவீன் தவெக,விவேக் அழகர்சாமி அன்ட் சாய் ஜெகதீஸ் என்ற பெயர்களில் உள்ள மூன்று பேர்வெளியிட்ட பதிவுகளை உடனடியாக நீக்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.மற்ற ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பானை செய்திகளையும்,பதிவுகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.


