வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என தொடர்ந்து இரண்டு படங்களையும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி அவரை முன்னணி ஹீரோவாக உயர்த்தியதில் இயக்குனர் பொன்ராமுக்கும் மிகப்பெரிய பங்குண்டு.. அதேசமயம் ஐவரும் தன்னை ஒரு கமர்ஷியல் இயக்குனராக அடையாளப்படுத்திக்கொண்டார்.
அதன் விளைவுதான் இவர்கள் இருவரும் இணைந்துள்ள புதிய படத்திற்கு பூஜை பூஜை போட்ட அடுத்த நாளே இதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் மிகப்பெரிய விலைகொடுத்து வாங்கியது.. இந்த புதிய படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.
வழக்கம்போல சூரியும் இந்தக்கூட்டணியில் இடம்பிடித்துள்ளார்.. மலையாள நடிகர் லால், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் இப்போது சமந்தா கலந்துகொண்டு நடித்துவருகிறார்.