
கடந்த 2015ஆம் வருடத்தில் தமிழ்சினிமாவின் பிளாக் பஸ்டர் படமான ‘தனி ஒருவன்’ அடைந்த வெற்றி நமக்கு தெரியாததா என்ன.. ? மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சுவாமி நடித்த இந்தப்படம் அதன்பின் தெலுங்கில் ராம்சரண், அரவிந்த்சாமி நடிக்க ‘துருவா’ என்கிற பெயரில் ரேமேக்காகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது..
பொதுவாக ஒரு கதை தமிழிலும் தெலுங்கிலும் வெற்றி பெற்றுவிட்டால் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் அந்தப்படத்தை கண்ணை மூடிக்கொண்டு இந்தியில் ரீமேக் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.. போக்கிரி, பாடிகார்ட், த்ரிஷயம் ஆகிய படங்களின் மூலம் அதை நாம் பார்த்திருக்கிறோமே.. அந்தவகையில் தனி ஒருவன் படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அர்ஜூன் கபூர் இருவரும் முக்கிய ரோல்களில் நடிக்க, சபீர்கான் இந்தப்படத்தை இயக்குகிறார்.


