பாண்டியராஜின் சிஷ்யர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செம’..!


இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு மிக எளிதாக படம் இயக்கம் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.. ஒரு சிலருக்கு தானே படம் தயாரித்து, அவர்களை இயக்குனராக்கி அழகு பார்க்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.. அப்படிப்பட்ட ஒரு உதவி இயக்குனரான வள்ளிகாந்த் என்பவரை ‘செம’ என்கிற படம் மூலம் இயக்குனராக மாற்றியுள்ளார் பாண்டிராஜ்..

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்து, இசையும் அமைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.. கதான்யகியாக தொண்டன் படத்தில் சமுத்திரக்கனியின் தங்கையாக நடித்த அர்த்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க மன்சூர் அலிகான், கோவை சரளா, பருத்திவீரன் சுஜாதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்..

இந்தப்படஹ்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. இந்த விழாவில் பாண்டிராஜ் படங்களில் நடித்து சினிமாவில் ஏற்றம் பெற்ற நகைச்சுவை நடிகர்கள் சூரி மற்றும் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததுடன் இந்த விழாவையும் கொஞ்ச நேரம் தொகுத்து வழங்கி நன்றிக்கடன் தீர்த்தனர்.

Leave a Response