இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதியின் ‘மேற்கு தொடர்ச்சி மலை’..!


இயக்குனர் லெனின்பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘மேற்கு தொடர்ச்சி மலை’.. இந்தப்படத்தில் புதுமுகன் ஆண்டனி கதாநாயகியாக நடிக்க, ‘ஜோக்கர்’ படத்தில் இசை என்கிற சமூக சேவகியாக நடித்த காயத்ரி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்..

இயக்குனர் லெனின் பாரதியின் தந்தையும் இசைஞானி இளையராஜாவும் பள்ளி தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை விஜய்சேதுபதி தயாரித்துள்ளார். இந்தப்படத்திற்காக இயக்குனரும் நடிகர் ஆண்டனியும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தில் உள்ளல மலைகிராமத்தில் தங்கி அந்த ஊர் மக்களுடன் கலந்து பழகியுள்ளனர். கதாநாயகி காயத்ரியையும் அந்தப்பகுதியில் ஒருமாதம் ஏலக்காய் தோட்ட வேலையில் மாத சம்பளத்திற்கு அனுப்பி வைத்து, அவரது கதாபாத்திரத்தை உள்வாங்க செய்துள்ளார் இயக்குனர் லெனின் பாரதி.

Leave a Response