தமிழக அரசுக்கெதிராக ஒருங்கிணையும் உலகத்தமிழர்கள்


தமிழகத்தினில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் விடுதலையினை வலியுறுத்தி உலகெங்கும் குரல்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. ஜூன் இரண்டாம் தேதி சுவிட்சர்லாந்தில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. ஜூன் எட்டாம் தேதி யாழ்ப்பாணத்தினில் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்க வேண்டிய நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்த பாசகவின் பினாமி அரசு உலகெங்கும் கண்டனத்துக்கு ஆளாகிவிட்டது. இனியாவது திருந்துவார்களா? என்று பலரும் கேட்கின்றனர்.

Leave a Response