மூன்று விதமான டைட்டில்களில் வெளியாகும் அர்ஜூன் படம்..!


ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது நடித்துவரும் படம் ‘நிபுணன்’. இந்தப்படம் இவருக்கு 150வது படம் என்பது சிறப்பு. இந்தப்படத்தை இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். இது அர்ஜுனின் 150வது படம் என்பதால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் வெளியிடுகிறார் அர்ஜூன்.

இந்த படத்திற்கு தமிழில் ‘நிபுணன்’ என்று பெயர் வைத்துள்ள நிலையில், தெலுங்கு பதிப்பிற்கு ‘குருஷேத்ரம்’ என்றும், கன்னடத்திற்கு ‘விஸ்மயா’ என்றும் தற்போது தலைப்பு அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில், அர்ஜூனுடன் வரலட்சுமி, பிரசன்னா, வைபவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.

Leave a Response