நடிகர் விஷால் திருமணம் – ஆந்திரப்பெண்ணை மணக்கிறார்

நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின.

நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று சமீபத்தில் அதை மறுத்திருந்தார்.

நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார்.

நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷாலுக்கு பெண் பார்க்கும் முயற்சியில் அவர் பெற்றோர் ஈடுபட்டு வந்தனர்.

இப்போது ஆந்திராவைச் சேர்ந்த மணமகளைத் தேர்வு செய்துள்ளனர்.
மணமகளின் பெயர், அனிஷா. இவர் தொழிலதிபர் ஒருவரின் மகள்.

விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அதன் பிறகு திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.

இந்தத் தகவலை விஷாலின் தந்தை ஜி.கே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Response